வணங்காமண் நிவாரண பொருட்களை வவுனியாவுக்கு அனுப்பும் ஏற்பாடுகள் பூர்த்தி: செஞ்சிலுவை சங்கம் தெரிவிப்பு

0

வணங்கா மண் கப்பலில் இருந்து கொலராடோ கப்பலுக்கு மாற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

வடபகுதியில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வணங்கா மண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கொழும்புக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து சென்னையில் கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்நிவாரணப் பொருட்களை வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கப் பிரதிப் பணிப்பாளர் சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசின் மேற்பார்வையுடன் கொலராடோ கப்பலிலுள்ள பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு வருகின்றது. 27 கொள்கலன்களிலான நிவாரணப் பொருட்களே தற்பொழுது இறக்கப்பட்டு வருகின்றன.

இப்பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டதும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.