புலிகளின் புதிய இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவு: ஆஸி. தமிழர் ஒழுங்கமைப்பின் சம்மேளனம்

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகளை வரவேற்பதாக அவுஸ்திரேலிய தமிழர் ஒழுங்கமைப்பின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசியல் முன்னெடுப்பு தொடர்பில், நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கான குழுவின் தலைவராக சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளமையை பாராட்டுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த குழு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் நலனுதவிகள், கலாசார மற்றும் அரசியல் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட வேண்டும் என இந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.