உண்மைக்காய் எழுவோம் 2

0

10.09. 2009
TYO SWISS

24.10.2009 அன்று சுவிஸில் உண்மைக்காய் எழுவோம் 2.

எதிர்வரும் 24.10.2009 பிற்பகல் 15.00 மணிக்கு மிகப் பிரமாண்டமான முறையில் சுவிஸ் பேர்ண்  நாடளுமன்றத்துக்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் 2. இம் மாபெரும் எழுச்சி நிகழ்வு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடாகியுள்ளது.

முன்பொருமுறை இதே சுவிஸ் மண்ணில், இதே நாடாளுமன்றச் சதுக்கத்தில், நடந்தேறிய உண்மைக்காய் எழுவோம் என்ற இளையோர்களின் எழுகை, சர்வதேசமெங்கும் முழங்கிய மாபெரும் இளையோர்களின் போராட்டங்களில் ஒன்றாகும்.

மீண்டும் அதே உத்வேகத்துடன், அதே நாடாளுமன்றச் சதுக்கத்தில், மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்வானது இரு கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகின்றது, அவையாவன வதைமுகளுக்குள் வாழும் மக்களை உடனடியாக மீள் குடியமர்த்த சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் எமது மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்னய உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும.

இந் நிகழ்வில் அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களையும், முக்கியமாக இளையோர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுக்கான வாகன வசதிகள் அனைத்து மாநிலங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.

உண்ணதமான உயிர்தியாகங்களுடன் தொடரும் எம் விடுதலைப் பாதையில், நோக்கங்கள் நிறைவேறும்வரை நிறைவுறாது  உண்மைக்காய் எழுவோம்!!!

தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

 

விழ விழ எழுவோம்
விரைவினில் நிமிர்வோம்
தடைகளை உடைப்போம்
தமிழீழம் அமைப்போம்

விடுமுறை கடிதங்கள்:  வேலை
பாடசாலை 

தொடர்புகளுக்கு:
தமிழ் இளையோர் அமைப்பு
தொலைபேசி: 076 453 51 62 / 078 897 44 45 / 078 905 47 18
இணையத்தளம்: www.tyo.ch       மின்னஞ்சல்: admin@tyo.ch

 

Share.

Comments are closed.