சுவிஸில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பிரகடணத்தை முன்னொட்டி முப்பதாயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் சுவிஸ் தமிழ் இளையேர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நடாத்தப்பட்டது

0

தலைவிரித்தாடும் முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு பாவப்பட்ட பாட்டாளி மக்கள் வரி குடுத்துக் காக்க முடியாது என்ற பெயரோடு சுவிஸின் அனைத்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்களும் இணைந்து நடாத்திய போராட்டத்தாள் தலை நகரமான பேர்ண் அதிர்ந்தது.

சுவிஸ் அரசானது தனது வங்கிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியைச் கட்டி எழுப்புவதற்கு குடிமக்களின் மாத வருமானத்தில் ஒரு கழிவை ஏற்படுத்தி அதன் ஊடாக வீழ்ந்த வங்கிகளின் போருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முயன்றதே சுவிஸ் மக்கள் காட்டிய இவ் எதிர்ப்புக்குக் காரணம்.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளையோர் தாயகத்தின் தற்போதைய நிலைமையை விளக்கி துண்டுப்பிரசுரம் கோடுத்ததுடன் உண்மைக்காய் எழுவோம் 2 க்கான அழைப்பிதல்களையும் வழங்கினர்.

Share.

Comments are closed.