லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடாபி உறுதி

0

தற்போது லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மர் கடாபி தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் தாமே தலையிட்டு குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக முஹம்மர் கடாபி, சுவிஸ் ஜனாதிபதி ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸிடம் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இரு நாட்டுத் தலைவர்களும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த வருடம், முஹம்மர் கடாபியின் புதல்வர் ஜெனீவாவில் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிஸ் வர்த்தகர்களையும் விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.