லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்கள் தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

0

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது குறித்த தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க லிபிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுக்கும் எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 16 மற்றும் 17ம் திகதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

லிபிய அதிபரின் புதல்வர் ஹனிபல் கடாபி சுவிட்சர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு சுவிஸ் வர்த்தகர்களும் நீண்ட காலமாக லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Share.

Comments are closed.