சுவிசில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு

0

ஊடக அறிக்கை
09.01.2010
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ்த்தேசிய இன உறவுகளே!!!
சுதந்திரமும் இறையாண்மையும் தன்னகத்தே கொண்ட தமழீழக் குடியரசே எமது விருப்பு என்பதை எதிர் வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சுதந்நிர தமிழீழத்துக்கான கருத்துக் கணிப்பில் தேசிய ஒருமைப்பாட்டுடன் அணிதிரண்டு வெளிப்படுத்துவோம்.
சுவிஸ் வாழ் தமிழ் இளையோர் சமூகமும் மக்களும்  நிறுவனங்களும் பொது அமைப்புக்குளும் ஒருங்கிணைந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் நடாத்தும் இவ் வரலாற்று வாக்கெடுப்பில் எம் தேசத்தையும் அதற்காய் மடிந்த தேசத்துநாயகர்களின் கனவை நனவாக்க எம்முடைய அரசியல் அபிலாசை என்ன என்பதை ஜனநாயக வழிமுறையினூடாக இவ்வுலகிற்கு தெருவித்து பிறந்திருக்கும் புத்தாண்டில் புதிதாய்ப் புறப்படுவோம்.

நன்றி 
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

Share.

Comments are closed.