தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்தமை சட்ட விரோதமில்லை: பிரான்ஸ் தூதரகம்

0

இந்த அறிக்கையில் உள்ளுர் அதிகாரிகளின் சட்டத்துக்கு உட்பட்ட எந்த செயலுக்கும் பிரான்ஸின் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பவர் மாதம் 1ம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, தமிழ்ச்செல்வனின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு லாகோர்னேவே பகுதியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரான்ஸின் சட்டமுறையின் படி, தனி மனிதனுக்கும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளது.

எனவே இந்த செயற்பாட்டையும் பிரான்ஸ் அரசாங்கத்தினால் எதிர்க்க முடியாது எனவும், இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாக கருத முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share.

Comments are closed.