எம்மைப் பற்றி

தமிழ் இளையோர் அமைப்பு

தமிழ் இளையோர் அமைப்பு எம் நாட்டில் அதாவது தமிழ் ஈழத்‌தில் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு முழுதும் தமிழ் இளையோர்களால் இயங்குகிறது.

இந்த இணைப்பு ஐரோப்பா, லண்டன், கனடா என பல நாடுகளில் பரவியது. இப்பொழுது சுவிஸ் நாட்டிலும் பல இடங்களில் இவ் அமைப்புகள் உள்ளன. இதன் நோக்கம் உலகில் இருக்கும் தமிழ் இளையயோர்கள் மாணவர்கள் உட்பட ஒன்று சேர்ப்பது ஆகும்.

இந்த அமைப்பில் 11 வயதில் இருந்து 30 வயதில் உட்பட்ட மாணவர்கள் இணையலாம்.

நோக்கங்கள்:

எம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை  ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும்.  இன்னொரு முக்கியமான நோக்கம், இலங்கயில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.

நம் பார்வையில் இருந்து …

தமது தாயகத்தில் இருந்து குடியேறிய தமிழ் மக்களின் வாழ்க்கை, இரண்டு தலைமுறைகளாக தொலைதூரநிலங்களில் அவரது வாழ்க்கையை தொடர்கிறனர். இந்த நிலங்களில் வளர்ந்து வரும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அடுத்த தலைமுறை பின்பற்ற நாங்கள் கடந்த ஒரு பாதை அவர்களுக்கு தெரியவைத்து, எங்களது தோற்றம் மற்றும் எங்களது கலாச்சாரம் நினைவில் கொள்ளவேண்டும். இம்மாணவர்களின் எதிர்காலத்தில் மிகவும் உறுதியான அறிவுசார்ந்த நோக்கங்களுடன் வளர்ப்பது. அதேநேரத்தில், எங்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்குவது எம் கடமைகளில் ஒன்று ஆகும். புலம்பெயர் நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் மொழி, கலாச்சாரமாம், பழக்கங்கள் பழகி இருந்தாலும், எமக்கெண்டு ஒரு நாடு, மொழி, கலாச்சாரம் எதிர்காலத்தில் எம்மை காத்‌துகொண்டு இருக்கிறது.

இளைஞர்கள் எம்மை வாழவைக்கும் இந்நாட்டின் மக்களோடு நல் லஉறவை உருவாக்கி, எங்களது திட்டங்களை அனுமதித்து வெற்றியையும் சகவாழ்வையும் பெறவேண்டும்.  இந்த தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில், ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கினோம்: தமிழ் இளையோர் அமைப்பு.