Browsing: செய்திகள்

ஈழம்

இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்:அமெரிக்கா கண்டனம்

இலங்கை தமிழர்களின் கைகளையும் கண்களையும் கட்டி, நிர்வாணமாக்கி சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை இங்கிலாந்து டி.வி. சமீபத்தில் வெளியிட்டது.

 

இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான சூசன் ரைஸ் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவர், ‘தமிழர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான படக்காட்சிகள் மிகவும் துயரமளிப்பவையாக உள்ளன. அவை மிகவும் கண்டனத்துக்குரியவை.

அமெரிக்காவின் சொந்த தேசிய பொறுப்புணர்வின் அடிப்படையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம் என்றார்.

ஈழம்

சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக…

ஈழம்

புலம்பெயர் இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை: பருத்தியன்

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.

ஈழம்

சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழத்தை மீட்டெடுப்போம், என்பதே செல்வராசா பத்மநாதன் கேபி அண்ணரின் கனவு

அரங்கேறியது அடுத்த சதி: கேபி அண்ணர் கைது!: 
சதிகளை முறியடிப்போம் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழத்தை மீட்டெடுப்போம், என்பதே செல்வராசா பத்மநாதன் கேபி அண்ணரின் கனவு,

ஈழம்

இலங்கை அரசின் கட்டுப்பாடுகளை ஏற்க செஞ்சிலுவைக் குழு மறுப்பு

இருதரப்பு முறுகல் முற்றுகிறது:

இலங்கையில் எங்கு, எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பாக, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அறிவித்திருக்கின்றது.இதன் காரணமாக இலங்கை அரசுக்கும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றுகின்றது என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஈழம்

தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது

அமெரிக்கா: 
 வன்னியில் தமிழ் மக்கள், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கலக்கமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈழம்

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்றிட்டங்களில் ஒன்றாக ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ இருப்பதும் அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. திரு உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையில் இதற்கான செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈழம்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2010 ஏப்ரலில்: வி.உருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தெகல்கா’ வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈழம்

சமஷ்டி போன்றே அதிகாரப் பகிர்வும் இலங்கையில் காணாமற் போய்விடும்: கேணல் ஹரிகரன்

சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசி விட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள்.
ஈழம்

எமது மக்களின் தாயகக்கோட்பாடு எமது ஒவ்வொரு அசைவிலும் காப்பாற்றப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கான உள்ளுராட்சி தேர்தல்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் அரசுக்கு சார்பானவர்களை நிறுத்துவதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலை வேட்கையையும், தாயகத்திற்கான கோட்பாடுகளையும் அழித்துவிட சிறீலங்கா அரச முயன்று வருகின்றது.

1 23 24 25 26