|
தமிழ் இளையோர் அமைப்பு - Tamil Youth Organization
தலைவர்: ஜீவகன் விஜயகுமாரன் உருவாக்கம் பெற்ற ஆண்டு: 2004 தமிழ் இளையோர் அமைப்பானது, இளையோர்களை உள்ளடக்கி சில பயன்னுள்ள இலக்குடன் நகரும் குழுவாகும். இவ் அமைப்பானது சுவிஸ் சட்ட விதி (ZGB) 60 கீழ் உள்ளடக்கபட்டுள்ளது. எமது தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது எமது அமைப்பானது 2001 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது. இத் தளத்தினை நாம் எமது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரவும், எம்மை அறிமுகம் செய்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும், தாயகம் சார்ந்து எடுத்துரைக்குவும் உருவாக்கியிருக்கின்றோம். புலம்பெயர் தமிழ் இளையோர்களின் மத்தியில் சமுதாய உயர்வினையும் தாயகம் சார்ந்த தேடலையும் விதைப்பதே எமது நோக்கம்.
சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்தின் பால் ரிசினோ மாநிலத்தில் இயங்கிவந்த ரிசினோ தமிழ் மாணவர் அமைப்பும் சுக் மாநிலத்தில் இயங்கி வந்த சுக் தமிழ் இளையோர் ஒன்றியமும் நடாத்திய நீண்ட நேர கலந்துரையாடலின் பின் எம்மின விடுதலை என்ற ஒரே இலக்கோடு தமிழ் இளையோர் அமைப்போடு ஒருங்கிணைநது சுவிஸின் பல பாகங்களில் கட்டமைப்புக்களை நிறுவி இயங்கி வருகின்றனர். அவர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடே இவ் இணையப்படைப்பு.
|