சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டால் நிறுத்தப்பட்டது.

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டால் நிறுத்தப்பட்டது.

 

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2009 18:49 சுவிஸ் சுக் மாநிலத்திலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படவிருந்த சிறீலங்கா பற்றிய ஒருபக்கச்சார்பான வர்த்தக நிகழ்வொன்று சுக் தமிழ் இளையோர் அமைப்பின் துரித செயற்பாட்டாலும், விடுதலையை நெஞ்சில் சுமந்து பல வழிகளிலும் உதவி புரியும் பாசத்துக்குரிய மக்களின் செயற்பாட்டாளும் நிறுத்தப்பட்டது.

28.08.2009 Herti Einkaufszentrum என்று அழைக்கப்படும் இவ் நிறுவனமானது வருடம் தோறும் ஒவ்வொரு நாடு சார்ந்து நிகழ்வொன்றைச் செய்வது வழக்கமானது. இதன் ஊடாக அந் நாட்டின் கலாச்சாரம், உணவுப்பழக்கம், மக்கள், பண்பாடு, போன்றவற்றை எடுத்துக்காட்டி சுவிஸ் மக்களை மகிழ்வடையச் செய்து மக்களை தன் பக்கம் கவர்கிறது. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பின்புலத்தில் ஒரு நாட்டின் பிரதான பங்கு வகிக்கும் உள்ளாசத்துறையை மேன்படுத்தும் நோக்கமுடையது.

 இதற்கு எதிர்ப்புத் தெருவித்தும,; எம் உறவுகள் படும் அவலத்தை விளக்கியும,; கடிதம் அனுப்பப்பட்டது. இந் நிகழ்வுக்கு மாற்றீடாக நிகழ்வு நடைபெறும் இடத்தில் தாயகத்தின் தற்போதைய நிலைமையை விளக்குவதற்கு செய்திமையம் ஒன்றை அமைத்துத் தரும்படி பரிந்துரைக்கப்பட்டது.

ஆயினும் இவற்றை எல்லாம் மறுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக சிறந்த சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் சுக் தமிழ் இளையோர் அமைப்பு மேற்கொண்ட கடுமையான முயற்சியால் நடைபெறவிருந்த நிகழ்வு முற்றாக நிறுத்தப்பட்டது. இதை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் போது சுக் தமிழ் இளையோர் அமைப்பில் சிலர் காவற் துறையினராலும் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டும் உங்கள் தமிழ் இளையேர் அமைப்பானது சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்பதை எம்மால் ஊகிக்கமுடிகிறது. என்றென்றும் எம் மதிப்புக்குரிய மக்களாகிய நீங்கள் துணை நிற்பீர்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். நீதி கேட்டு வாழ்வதற்கு உரிமை கேட்டு போராடிய எமது முன்னோடிகள் பெற்ரோர்கள் ஆகிய உங்களை ஏமாற்றிய இவ்வுலகம் மொழியறிந்து, சட்டங்களறிந்து, தொடுக்கப் போகும் விடுதலைக்கான எமது அறிவுப்போருக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதுற்கு இந் நிகழ்வின் முடிவு சாட்சி.

எமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும்.

இளையோர் கரங்கள் உயரும் உயரும் அகில உலகை உலுப்பும்.

Share.

Comments are closed.