சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்

   

சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல் 2’500ற்கும் மேற்ப்பட்ட மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு ஈழவிடுதலைக்காக குரல்கொடுத்தனர்.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் 24.10.09 சனிக்கிழமை பேர்ன் பாராளுமன்றத்திற்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் எனும் எழுச்சி ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாலை 16.00 மணிக்கு பொதுச் சுடறேற்றலுடன் ஒன்றுகூடல் ஆரம்பமானது. தமிழீழத் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு சுவிஸ் நாட்டின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஈகைச்சுடறேற்றலுடன் உரைகள் ஆரம்பமாகின.

இளையோர்களால் டொச் பிரெஞ் இத்தாலி போன்ற மொழிகளில் தற்போதை தமிழரின் அவல நிலைகுறித்து மக்களுக்கு பேச்சுகள் ஊடாகவம் துண்டுப்பிரசுரம் ஊடாகவும் எடுத்துக் கூறப்பட்டது. அதனைத் தவிர சர்வதேச மனித உரிமை மையத்தின் உபபொறுப்பாளரும் மனிதவுரிமைவாதியும் இனவொற்றுமை மையத்தின் தொடக்கப்பணிக்கு முக்கிய பங்கு வகித்தவரும் மற்றும் பொதுவடமை ஆவலருமான ஆழnமை ளுஉhடäபநட அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.

சமகால தாயக நிலவரம் மற்றும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் மனித அவலங்களை விளக்கி சுவிஸ் அரசாங்கத்திற்கு இளையோர்களால் மனுவொன்றும் வெள்ளிக்கிழமையன்று கையளிக்கப்பட்டிருந்தது.

இளையோர்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் 2’500ற்கும் மேற்பட்ட சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றிருந்தனர். தமிழீழம் விடுவிக்கப்பட்டு தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் உலகினால் அங்கீகரிக்கப்படும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றமுழக்கம் அரங்கில் மேலோங்கிநின்றது. மக்கள் மிகவும் எழுச்சியுடன் தேசியத்தலைவரின் புகைப்படங்கள் மற்றும் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு காணப்பட்டனர். அத்தோடு தாயத்தில் நடந்தேறிய இனப்படுகொலைகளை சித்தரிக்கின்ற பாதாதைகள் மற்றும் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கின்ற படங்கள் மற்றும் பாததைகளையும் தாங்கிநின்றனர்.

இறுதியாக இளையோர்களால் இன்றைய நிகழ்வின் பிரகடணம் வாசிக்கப்பட்டு கொடி இறக்கலுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

http://www.tyo.ch/de/index.php?option=com_content&view=article&id=230:ueber-2500-tamilen-nehmen-an-der-tyo-kundgebung-in-bern-teil-&catid=42:nachricht&Itemid=54

 

Share.

Comments are closed.