அதன் தமிழ் மொழியாக்கம் கீழ் வருமாறு
பேர்ன் 29.06.2009
இலங்கையின் வடக்கில் நடந்தேறிய கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்ப்பலியாகியுள்ளனர். IKRK நிறுவனம் கற்பனைசெய்ய முடியாத மாபெரும் மனிதஅவலம் என்று இதைச் சுட்டிக்காட்டியுள்ளது. பல தசாப்த்த காலமாக இருந்துவரும் இனப்பிரைச்சினையால் என்னற்ற உயிர்கள் வேட்டையாடப்பட்டதையும் பல்லாயிரக்கணக்கானோர் தாம் வாழ்வதற்கான அனைத்து வழங்களைம் இழந்து நிற்கதியாகியுள்ள நிலையையும் நான் அளுத்ததிருத்தமாகக் கண்டிக்கிறேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுவிஸ் அரசானது வேறு நாடுகளுடன் இணைந்து ஆயுத ஓய்வை ஏற்படுத்துவதற்கும் பகையையுணர்வைப் போக்குவதறகும் பலமுறை முறச்சிகள் மெற்கொண்டது. அத்துடன் UNO மனிதவுரிமை ஆணையகத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்வதற்கு தனது முழு முயற்சியை மேற்கொண்டது. அவ் விடயம் பயனளிக்கவில்லையென்றாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் பார்க்கிறோம்.
எதிலிகள் ஆக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட மக்கள் விடயத்தில் எமது அரசு முக்கிய கவனமும் கரிசணையும் செழுத்தி வருகிறது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் சுதந்திரமாக பணி புரிவதற்கும் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கான போசாக்கான உணவு மருந்து போன்றவை உறுதி செய்யப்படுவதற்கும் மிக விரைவாக அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீழ் குடியேற்றம் செய்வதற்கும் கடும் முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக நாம் ஒதுக்கீடு செய்துள்ள 4.8 மில்லிலன் சுவிஸ் பிராங்குகளுடன் 1 மல்லியனை அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்தொகையை உயர்த்துவதற்கும் ஆலோசித்து வருகிறோம்.(குறிப்பு: இவை சுவிஸ் அரசினது நேரடிக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுகிறது)
சுதந்நிர ஊடகச் செயற்பாட்டுக்கான எவ்வித அறிகுறிகளும் அங்கு தற்பொழுது நிலவவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் செல்வதற்கான விசா அனுமதியும் மறுக்கப்பட்டே வருகிறது. இவ்வருட ஆரம்பகாலத்திலிருந்து பல ஊடகவியலாலர்கள் மனிதவுரிமைச்செயற்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இப்படி அச்சுறுத்தப்பட்ட பல ஊடகவியலாலர்கள் மனிதவுரிமைச்செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கு நாம் அரசியல் அகதி அந்தஸ்தும் வழங்கியுள்ளோம்
அரசியல் வழியிலான நல் இணக்கத் தீர்வு ஏற்படுவதை எமது அரசு ஆழ்ந்து எதிர்பார்க்கிறது. ஆத்துடன் எதிர்காலத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாம் எமது ©ரண ஒத்துளைப்பை வழங்குவோம். மேலும் மனிதாவிமான உதவிகள் புரிவதற்கும் அமைதிப்பேச்சு ஒன்றிற்கான ஏது நிலையை ஏற்படுத்திக கொடுத்து அனைத்த் தரப்பினது அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கும் எமது கதவுகள் திறந்தே உள்ள அதே சமயம் இவ் விடயத்தில் சுவிஸ் முக்கிய பங்காற்றவும் காத்தே இருக்கிறது.