சுவிஸ் தமிழ் இளையோர்களின் தமிழ்த் தேசிய எழுச்சிப்பிரகடணத்தை முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு ஒன்று கூடல்கள் பொது நிகழ்வுகள் என சுவிஸின் அனைத்துப் பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந் மலர்வணக்க நிகழ்வின் ஈகைச்சுடரினை சுக் மானில இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் சுவி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செழுத்தப்பட்டுது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து சுக் மானில தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் சிவபாதம் அவர்கள் தலீபன் அண்ணா சார்ந்து சிறிய கருத்துரைப்பும் வழங்கினார்.
மதியம் 12.00 மணிக்கு நிகழ்வு முற்றுப்பெற்றது.