ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறும் வகையில் அந்தத்திட்டத்தின் சீரியத்தன்மையை கடைப்பிடிக்கவேண்டும்.
அது தவறும்பட்சத்தில் சிறீலங்கா அதன் தாக்கத்தை எதிர்நோக்க நேரிடும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.
இந்த திட்டத்தின் பயன் மனித உரிமைகளை மதிப்பதிலேயே தங்கியுள்ளது என பிரிட்டன் எச்சரித்துள்ளது. பிரிட்டன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் மீது உரையாற்றிய சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டன் பாராளுமன்ற உதவிச் செயலாளர் மைக்கல் பொஸ்டர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதன் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை சிறீலங்காவுக்கு வழங்குவதற்கு ஆதரவளிக்கக்கூடாது என பிரிட்டன் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விவாதத்தின்போது தெரிவித்தமைக்கு பதிலளிக்கையிலேயே பொஸ்டர் இதனை தெரிவித்தார்.