பல்லாண்டுகாலம் அடிமையினமாக வாழ்ந்த தமிழினத்தை தலைநிமிரச்செய்ததுடன், சிங்களத்திடம் இழந்த உரிமைகளை மீட்டெடுத்துஇ தமிழர்தாயகத்தில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரத்தமிழீழரசு அமைப்பதுதான் ஒரேதீர்வு என்ற தமிழீழமக்களின் 1977ஆம் ஆண்டு தேர்தல் தீர்ப்பையேற்று, தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்செல்வங்களிற்கு, நெதர்லாந்தில் உத்ரெக் நகரில்இநேற்று 27.11.2009 வெள்ளி நடைபெற்ற மாவீரர்நாளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் வணக்கங்களைச்செலுத்தினர்.
நிகழ்வின் ஆரம்பத்தில்இ மதியம் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை மாவீரரின் தாய் ஏற்றிவைக்கஇ நெதர்லாந்தின் தேசியக்கொடியினை முக்கிய தமிழினச் செயற்பாட்டாளரும் தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரரின் சகோதரியும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்துஇ மணியொலிக்கப்பட்டுஇ அனைத்து மாவீரர்களிற்கும் சிங்களஇ இந்திய அரசுகளினாலும் இரண்டகர்களினாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களிற்கும் நாட்டுப்பற்றாளர்களிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சிறப்புக்காணொளித்தொகுப்பும் தமிழீழவிடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து,சிறப்பாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவிடத்தில் துயிலுமில்லப்பாடல் ஒலிக்கஇ மாவீரர் குடும்பங்களால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, தமிழமுத இசைகுழுவினர் மாவீரர்பாடல்களை வழங்கஇமக்கள் அனைவரும் நீண்டவரிசையில் காந்திருந்து கார்த்திகைப்பூக்களால் தங்கள் மலர்வணக்கங்களை மாவீரர்களிற்குச் செலுத்தினர்.
நிகழ்வுகளாக, மாணவர் உரைகள், நினைவுரை, இளையோர் உரை,எழுச்சிநடனங்கள், எழுச்சிக்கவிதை என்பன இடம்பெற்றன. நிகழ்வின் முடிவில், தமிழர்களிற்கான நிரந்தரத்தீர்வு தமிழீழமே எனவும் தாய்மண்ணின் மீட்பிற்காக தொடர்ந்து உழைப்போம் என அனைத்து மக்களும் எழூந்து நின்று கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தேசியக்கொடிகள் கையேற்கப்பட்டு எழுச்சியுடன் இந்நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது