இலங்கை உட்பட சுமார் நூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை காப்பாளர்கள் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ஒன்றுகூடியுள்ளனர்.
டப்ளினில் நேற்று ஆரம்பமான மூன்று நாள் மாநாட்டில், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை முக்கிய உரையை ஆற்றினார்.
இதன்போது மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தல் விடுத்தார்.