சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சிறீங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் துணைத்தலைவர் வலரி ப்லவர் அவர்கள் கருத்துதெரிவிக்கையில்:
‘துர்அதிஸ்ரவசமாக சிறீலங்காவில் பத்திரிகைத்துறை பலத்த சவால்களை எதிர்கொள்வதாகவும் அச்சூழல் அத்துறையில் அதிகரித்து செல்தாகவும்’ தெரிவித்துள்ளார்.
‘மக்கள் உண்மையை வெளியிடுவதற்கு அஞ்சுவதாகவும் அவர்கள் கதைகளையும் செய்திகளையும் சுய தணிக்கைக்கு உட்படுத்துவதாகவும் அல்லது அவர்கள் காயப்படுத்தப்படுவதாகவும் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அவர்களை சுற்றியுள்ள சூழலில் இடம்பெறுவதாகவும்’ அவர் பத்திரிகையாளர்களது கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தள்ளார்.