பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி

0

இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல..  எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா..? இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா..? அன்றே சர்வதேசத்தின் கதவுகளை நாம் தட்டிக் கேட்டோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இன்று அவர்களே அதை கேட்கும் தருணத்தில் நாம் அமைதி காப்பது சரியா..?


நாம் எமது மண்ணிற்காகவும், எம்மினிய உறவுகளுக்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பலவுள்ளன. எமது காலத்தின் கடமை உணர்ந்து பொங்கு தமிழராய் வாரீர் 22.09.2012 அன்று ஐ.நா முன்றல் நோக்கி என்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்..!

இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது இன்றாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா…!

 

Share.

Comments are closed.