கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch
சுவிஸ் சுகாதரத்துறை UFSPயின் தலைமையாளர் Daniel Koch மக்கள் அனைவரும் வெளியிட்ட சமூகவிதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசஸ் பரவுவதை எம்மால் தடுக்கமுடியாது ஆனால் ஆபத்து நிலையில் உள்ளவர்களை பாதுகாக்கலாம்.
இவ்விதிமுறைகள் கடைப்பிடிக்காவிடில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாவார்கள். ஆகையால் அவர்களை பராமரிப்பது கடினமாகிவிடும். தற்பொழுது நாம் வைரஸ் பரவும் துடக்க நிலையில் தான் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது தீவிர சிகிச்சை நிலையங்கள் தடைகள் இன்றி இயங்குகின்றன ஆனால் இறப்புகளின் எண்ணிக்கையும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறையவில்லை.