நன்றி கூறுவதற்கான நேரம் வந்துவிட்டது, அனைவரும் வருகின்ற வெள்ளிக்கிழமை இதனை கடைப்பிடிப்போம்.
மதியம் 12.30 மணிக்கு நாம் அனைவரும் எமது வீடுகளின் சாளரங்களைத் திறந்தோ அல்லது மாடத்தில் நின்றோ உங்கள் கரங்களை தட்டுமாறு வேண்டப்படுகின்றீர்ரகள். 60 நொடிகள் எமது கரகோஷம் ஒலிக்கட்டும்.
இந்த கைதட்டல் இரவு, பகல் என பார்க்காமல் எமது நன்மைக்காய் பணிபுரிந்து, தங்கள் உயிரை துச்சமென மதித்து தம் சேவையை சிறப்பாக ஆற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு நாம் நன்றி செலுத்தும் முகமாக முன்னெடுக்கப்படுகின்றது. இப் பூமியில் வாழும் அனைவரும் கோரோனா எனும் தொற்றுநோயய் கண்டு அஞ்சலாம், ஆனால் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களோ பயங்களை தள்ளிவைத்துவிட்டு நம் நன்மை கருதி பணியாற்றுகின்றார்கள்.
இன்று வரை இவர்கள் நமக்காக செய்துவரும் சேவைக்காகவும் எதிர்வரும் நாட்களில் செய்யப்போகின்ற சேவைகளிற்காகவும் நாங்கள் இவர்களிற்கு நன்றி கூற கடமை பட்டிருக்கின்றோம்.
வருகின்ற வெள்ளிக்கிழமை (20.03.2020) நாளை 12.30 மணிக்கு அனைவரும் இணைந்து 60 நொடிகல் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்காக கரங்களை தட்டி நன்றி செலுத்துவோம்
இதனை அனைவருக்கும் அறியப்படுத்துவோம்.