அசின்- ராஜபக்ச மனைவியுடன் போட்டோவுக்கு போஸ்! பார்த்ததும் இரத்தம் கொதித்தது! இரத்தக்கண்ணீர் வடிந்தது!!: சத்யராஜ் ஆவேசம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால், அந்த கதாநாயகனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கேட்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன முடிவு செய்யப்போகிறது நடிகர் சங்கம் என்ற கேள்வி எழுந்தது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம் கூடியது.

சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவியும், செயற்குழு உறுப்பினர் சத்யராஜும் இலங்கை சென்ற நடிகை அசினை கடுமையாக கண்டித்து பேசினர்.

நடிகர் ராதாரவி, ’’இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார்.

அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.

அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்’’என்று பேசினார்.

நடிகர் சத்யராஜ், ’’அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது.

இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
கருணாஸை நான் கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன்.

நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்’’என்று ஆவேசமாக பேசினார்.

{ppgallery}news/sathyaraj{/ppgallery}

 

Share.

Comments are closed.