அம்பாறையில் தொடர் மழையினால் பலஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதிப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

அம்பாறையில் பெய்துவரும் தொடர் மழையினால் பலஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்க மேல் தொடர்மழை பெய்து கொண்டிருக்கின்றது. மழை பெய்து கொண்டிருப்பதினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கிராம மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

வீதிகள் மின்சாராங்கள் தடைப்பட்டுள்ளன. பெருமளவான தமிழ்மக்கள் பொது இடங்களில் வாழ்கின்றார்கள். இவர்களின் குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அல்லல்படுகின்றார்கள்.

 

இன்நிலையில் மக்களுக்கு எதுவித உதிவிகளும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடையே தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

 

குழந்தைகள் காச்சல் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் ஐம்பதாயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.