ஆறு தமிழ் பேசும் கட்சிகள் பொதுவான கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டம்

Google+ Pinterest LinkedIn Tumblr +


ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான ஓர் கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு  தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஸ்ரீதரன் பிரிவு ஆகியன பொதுவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரவூப் ஹக்கீம், இரா.சம்பந்தன், மனோ கணேசன், சித்தார்த்தன், ஆனந்த சங்கரி, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதிநிதிகள் நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
வடக்கு மக்களை மீள் குடியேற்றல், கிழக்கு மாகாண காணி விநியோகம், எதிர்காலத் தேர்தல்களின் போது தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட எட்டுக் காரணிகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
இந்த ஆறு கட்சிகளும் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share.

Comments are closed.