இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம், இடம்பெயர்ந்த சுமார் 120.000 பேரை நிபந்தனைகள் இன்றி, விடுவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் சர்வதேச நிபுணர் யோலன்டா போஸ்டர், கோரியுள்ளார்.இலங்கை அரசாங்க அறிவித்தலின்படி, முகாமில் உள்ளவர்கள் முகாமிலேயே தங்கியிருக்கலாம் அல்லது, மீளக்குடியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, முகாமில் இருந்து வெளியேறுபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக யோலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில், முகாமில் இருந்து விடுவிக்கப்படுவோர் மீண்டும் கைதுசெய்யப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழி அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
 
இந்தநிலையில், மீள்குடியேற்றப்படுவதற்காக, அழைத்துச்செல்லப்படுவோர், வீதிகளில் விடப்படுகின்ற சம்பவங்களும், தமக்கு கிடைத்துள்ளதாக யோலன்டா போஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, மீள்குடியமர்த்தப்பட்டோர் காணாமல் போன தமது உறவுகளை தேடிக்கொள்வதற்கான நீதிச்சேவைகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
 

Share.

Comments are closed.