இடம் பெயர்ந்த அரசாங்கங்களும் நாடு கடந்த அரசும்

Google+ Pinterest LinkedIn Tumblr +

பொதுவாக அரசியலில் அரசு, அரசாங்கம் என்னும் சொற்றொடர்கள் மாறி மாறிப் பேசப்பட்டாலும் இவ்விரண்டும் ஒன்றல்ல. எண்ணக்கரு ரீதியில் இரண்டும் வேறுபட்டவையே. அரசு என்கின்றபோது அது நிலையானதொன்று. ஒரு நாட்டின் நிர்வாக இயங்கு சக்திதான் அரசு. இதற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அடிப்படை அம்சங்கள் இன்றியமையாதவை.

ஆகவே அரசு என்பது எப்பொதும் மாறாத ஒன்று ஆனால் அரசாங்கம் அரசின் ஒரு பகுதியே. இது ஜனநாயக ரீதியான தேர்தல்களின் பின்னால் மாற்றமடையக் கூடியது. அரசாங்கம் என்பது சட்டம்இ நீpதிஇ நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளைத் தன்னகத்தே கொண்டதோடு ஓர் அரசின் கருவியாக அதன் விருப்பினை வெளிப்படுத்திச் செயற்படும் நிறுவனமுமாகும்.

நவீன உலகின் பல்வேறுபட்ட அரசியற் சித்தாந்தங்களையூம், கோட்பாடுகளையூம் பின்பற்றி பல்வேறுபட்ட அரசுகள் தோற்றம் பெற்றன. இவ்வரசுகளின் கோட்பாட்டு ரீதியான தத்ததுவங்கள் மானிட அறிவியல் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றமடைந்து பல்வகைத் தன்மையூடைய அரசுகளும், அவற்றுக்கான அரசாங்கங்களும் நிறுவப்பட்டிருக்கின்றது. ஆகவே அரசியற் கோட்பாடுகளும், அரசியற் செயன்முறைகளும் தொடர்மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதை இன்றைய நவீன அரசியலில் நாம் வெளிப்படையாகக் காண முடிகிறது. இந்தவகையிலாக அமைந்த இடம்பெயர்ந்த அரசாங்கம். அல்லது புகலிட அரசாங்கம் (Government in Exile) என்ற எண்ணக்கருவின் வயது நூறாகிவிட அதனுடைய தொடர்ச்சியாக அதிலிருந்து பிறந்த புதிய அரசியற் தத்துவமாகவே நாடு கடந்த அரசு (Transnational Government) என்பதனை நோக்க முடியூம்.

புகலிட அரசாங்கமும் நாடுகடந்த அரசும் ஒன்றா? அல்லது இரண்டும் வெவ்வேறுபட்டதா? இவை இரண்டுக்குமிடையிலான ஒருமைப் பாடுகள் யாவை? இவ்விரண்டினுடைய செயற்பாட்டு முறைமை எத்தகையது? என்பவற்றை யாவரும் விளங்கிக் கொள்வது மிகக் கடினமானதொன்றாக இருப்பதனால் இவ்விரண்டு அரசியற் சித்தாந்தங்கள் பற்றி வரலாற்று ரீதியான நோக்கில் விளக்க வேண்டிய காலகட்டத்தில் காலச்சூழலின் தேவை கருதி இத்தொடரை வரலாற்று இயங்கியல் நோக்கில்; ஆராய முற்படுகிறது.

ஓர் அரசு இயங்குவதற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறைமை ஆகியன இன்றியமையாதவை. என்று கூறப்பட்டாலும் இன்றைய நவீன உலகில் இந்நான்கில் ஒன்றௌ அல்லது இரண்டோ இல்லாமல் சில அரசுகள் இயங்குவதை நடை முறை உலகில் நாம் காண முடியூம். நிலமும், இறைமையூம் இன்றி இன்று சில அரசுகள் இயங்கிவருகின்றன. ஆனால் மக்களின்றி ஓர் அரசு இயங்க முடியாது. மக்கள் இல்லையேல் அரசு இல்லை. ஆகவே புராதன அரசு பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் தற்கால உலகில் மாற்றமடைந்து சென்றிருப்பதனை காணமுடிகின்றது.

நிலமும், இறைமையூம் இன்றி உலகில் பல அரசாங்கங்கள் இடம்பெயர்ந்த அரசாங்கங்களாக வேறொரு நாட்டில் இயங்கி வந்ததன குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியற் குழப்பநிலை, ஆக்கிரமிப்பு, கிளர்ச்சி, இராணுவப்புரட்சி போன்ற காரணிகளினால் இந்நாடுகளின் அரசியற் தலைவர்களும், சகாக்களும் அல்லது பல்தேசிய இனம் வாழும் நாட்டில் ஒரு தேசிய இனத்தின் மீதோ அல்லது சிறு தேசிய இனத்தின் மீதோ சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகித்தலும், சித்திரவதை, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், மொழி, சமய, கலாச்சார தேசிய அடையாளங்களை சிதைத்தல் முதலான இனப்படுகொலை இடம்பெறும் ஒரு நாட்டில் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் தனது தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கவோ, நிலைநிறுத்தவோ முடியாத பட்சத்தில் தமது இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக தமது தாயகத்திற்கு வெளியே பிறிதொரு நாட்டில் தஞ்சம் புகுந்து அந்நாடுகளின் அங்கீகாரத்துடன் புகலிட அரசுகளை (Government in Exile) நிறுவி ஜனநாயக வழிமுறைச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு அனைத்துலக சட்ட மரபு நெறிகளில் இடமுண்டு.

அந்தவகையில் கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்து இயங்கிய அரசுகளைப் பட்டியல்ப் படுத்துவோமானால் முதலிடம் பெறுவது இந்திய அரசுதான். இந்திய அரசு இரண்டு முறை இடம்யெர்ந்த அரசாங்க அரசியல்த் தத்துவத்தை பிரயோகித்ததோடல்லாமல் முதன்முறையாக உலகுக்கு அறிமுகப்டுத்தியது எனவூம் கொள்ளமுடியூம்.

1, இந்திய அரசாங்கம் – 1,12,1915 – இந்தியா
2, பெலரஷ்யன் தேசியக் குடியரசு 1920 – பெலரெஸ்யா
3, இந்திய ஆசாத் ஹிந்த் – 21,10,1943 – இந்தியா
4, மலுகு செலாற்றன் குடியரசு 1950 – இந்தோனேசியா
5, மததியத் திபெத்திய நிர்வாகம் 1959 – சீனா
6, லாவேஸ் ஏகாதிபத்திய அரசு – 1975 – லாவோஸ்
7, கபிண்டாக் குடியரசு – 1975 – அங்கோலா
8, சகாரவி அரபு ஜனநாயகக் குடியரசு – 1976 – மெரோக்கோ
9, ஈரான் ஏகாதிபத்திய அரசு – 1979 – ஈரான்
10, எதியோப்பி அரச சபை – 1993 – எதியேப்பியா
11, அப்காசிய சுயாட்சிக் குடியரசு – 1993 – அப்காசியா
12, செச்சினிய குடியரசு – 2000 – ரஷ்யா
13, சேர்பியன் கரஜினாக் குடியரசு – 2005 – குரோசியா

மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் ஏற்பட்டிருந்த அரசியற் குழப்பநிலை காரணமாக அரசியற் பிரமுகர்கள் நாட்டைவிட்டு வெளியேறி புகலிட அரசுகளை நிறுவி செயற்பட்டதுவூம் பின்னர் தாயகத்தில் தமக்குச் சாதகமான அரசியற் சூழல் ஏற்படுகின்றபோது நாடுதிரும்பி அரசியலில் ஈடுபட்டிருந்தததையூம் காண முடியூம். அதேசமயம் மீண்டும் நாடு திரும்;பமுடியாமல் தொடர்ந்தும் புகலிட அரசு என்ற நிலையில் இயங்கும் நாடுகள் பல இன்றும் உள. இவ்வாறு எண்ணத்தக்க வகையில் தான் திபேத்தின் ஆண்மீகத் தலைவர் தலாய் லாமாவின் தலைமையிலான மத்திய திபெத்திய நிர்வாகம் இன்றும் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இடம்பெயர்ந்த அரசுக்கும், நாடுகடந்த அரசுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை கண்டறிவதற்கு வரலாற்று ரீதியில் புகலிட அரசுகள் என்ற அரசியற் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்தியப் புகலிட அரசாங்கத்தின் தோற்றத்திலிருந்து நோக்குவோமாயின் இந்திய உப கண்டம் முழுவதும் பிரித்தானியக் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்டிருந்த வேளை இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்திய தேநியக் காங்கிரஸ் இந்தியாவின் உள்ளே ஜனநாயக முறையிலான சாத்வீகப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்க சாத்வீகப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் இந்தியாவிற்கு வெளியே முதலாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை. ஆப்கானிஸ்தானில் 1,12,1915 இல் ஆப்கான் அரசின் அனுமதியூடன் நிறுவப்பட்டது.

இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர் அமீரினதும், அவரது அரச குடும்பத்தினரதும் ஆதரவூடன் நிறுவப்பட்ட அரசு ஜேர்மன், ஜப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகியவற்றின் அனுசரணையையூம் பெற்றதோடு தமது சதந்திரப் பிரகடணக் கருத்துக்களை உலகெங்கும் பரப்ப முயன்றது.

இவ் இந்திய அரசிற்கு ஜனாதிபதியாக ராஜா மகேந்திரப் பிரதாப்பும், பிரதமராக மௌலானா பர்ஹத்துல்லாவூம், வெளிவிவகார அமைச்சராக சென்பகராமன் பிள்ளையூம், கடமையாற்றினர். ராஜா மகேந்திரப் பிரதாபபின் இந்தியச் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் அன்றைய ஆப்கானிஸ்தானின் செலாவாக்கு மிக்க பத்திரிகையாகிய சிறாஜ் அல் – அக்பர் பத்திரிகை மூலம் வெளியூலகெங்கும் பரப்பப்பட்டு நாடுகடந்த இந்திய அரசு வெற்றிகரமாக இயங்கியதோடு தமக்குச் சாதகமான நேச நாடுகளைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியையூம் எட்டியிருந்தது.

ஆனால் இவ்வாறு ஆப்கானிஸ்தானில் இயங்கிய இந்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பிரித்தானியா பிரயோகித்த கடும் அழுத்தம் காரணமாக ஆப்கான் அரசு 1918 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றமையால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதனால் தோல்வியில் முடிவடைந்தது. இவ்வரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த சென்பகராமன் பின்னர் ஹிட்லரின் ஜேர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எமடான்” கப்பலின் படைத்தலைவராகி பின்நாளில் சென்னைத் துறைமுகத்தின் மீதும், சென்ஜோர்ஜ் கோட்டை (தமிழ்நாடு அரசுச் செயலகம்), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே தற்காலிக புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு கட்டாயம் ஒரு நாட்டின் அங்கீகாரமோ அல்லது அனுமதியோ தேவை. இவ்வாறு ஆதரவளிக்கின்ற நாடுகள் அகப்புற அரசியல் அழுத்தம் காரணமாக ஆதரவை விலக்கிக் கொள்ளும் படைசத்தில் அரசாங்க அங்கத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு அரசாங்கம் தொல்வியடையூம் என்பதற்கு முதலாவது புகலிட இந்திய அரசு நல்லதோர் உதாரணம்.

இரண்டாவது முறையாக புகலிட அரசு பற்றிச் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் 24 ஆண்டுகள் இந்தியர்களுக்குத் தேவைப்பட்டது. இவ் இரண்டாவது புகலிட அரசுப்பிரகடணம் சிங்கப்பூரில் இரண்டாம் உலக மகாயூத்த காலத்தில் தென்கிழக்காசியா முழுவதையூம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த யப்பானின் ஆதரவூடன் 21,10,1943 இல் இந்திய ஆசாத் ஹிந்த் அரசாங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அந்தமான், நிக்கோபார் தீவூகளும், அசாம், நாலாந்தின் சில பகுதிகளும், பர்மாவின் சில பகுதிகளும் இவ்வரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதன் பிரதமராக இந்தியத் தேசிய இராணுவம் என்ற விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த நோதாஜி சுபாஸ் சந்திரபோஸே பொறுப்பேற்று இந்தியச் சுதந்திரத்திற்காக இராணுவ முறைமையிலான போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் சென்றார்.

இவ் ஆசாத் ஹிந்த் அரசு தனியான வங்கி, பணம், நீதிமன்றம் என ஒரு அரசுக்குரிய நிர்வாக அலகுகளை நிறுவியதோடு அதை திறம்படவூம் செயற்படுத்தியிருந்தது. ஆனால் இவ்வரசு ஜேர்மன், துருக்கி, யப்பான், குரோசியா, பர்மா, மன்சூக், பிலிப்பைன்ஸ் முதலான ஒன்பது நாடுகளுடன் ராஜரீக உறவூகளைக் கொண்டிருந்தாலும் அது முற்றுமுழுதாக யப்பானின் தயவிலேயே இயங்க வேண்டிய காலச்சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனால்தான் 2ஆம் உலகப் போரில் யப்பானின் தோல்வியூடன் இந்த அரசம் அதன் தலைவரும் மறைந்து போயினர். இந்தியத் தேசிய விடுதலைக்கு மகாத்மாகாந்தியின் சாத்வீகப் போராட்டத்தினை விட நோதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் போராட்டமே மிகப்பெரிய பங்கினை வகுத்ததை இந்திய ஜனநாயக வாதிகள் மறைத்துவிட்டனர் என்பதே உண்மை.

ஆகவே வெளிநாடுகளில் இயங்கும் தற்காலிக புகலிட அரசுகள் படிப்படியாக முன்னேறி நாட்டின் சிலபகுதிகளை நிர்வகிக்கவூம் அரசுக்குரிய அந்தஸ்தினை சர்வதேச அங்கீகாரததினைப் பெறவூம் முடியூம் என்பது இரண்டாவது புகலிட இந்திய அரசு சாதித்துக் காட்டியிருக்கிறது. ஆனால் இங்கும் இன்னொரு நாட்டின் மீது தங்கியிருத்தல் அல்லது ஆதரவூ இழக்கப்படுவதனால் அரசு தோல்வியடையூம் என்பது எமக்குப் புலனாகிறது. அத்தோடு ஆரம்பத்தில் மக்களும் நிலமுமின்றி இயங்கிய அரசாகவூம் பின்னர் நிலத்தன் ஒரு சிறிய பகுதியையூம் இராணுவத்தையூம் மாத்திரம் கொண்ட அரசாகவூம் புகலிட இந்திய அரசுகள் இயங்கியிருக்கின்றன.

இந்தியாவின் இடம்பெயர்ந்த அரசுகளின் தோற்றத்திற்கு முதலாளித்துவ வல்லரசின் குடியேற்ற வாதம் காரணமாக அமைந்தது. ஆனால் திபெத்தின் புலம்பெயர் அரசின் தோற்றத்திற்கு சோசலிசவாத மேலாண்மையூம், நில ஆக்கிரமிப்பும் காரணமாக அமைந்தது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாவோவின் தலைமையில் திரண்ட சீன விவசாயிகளின் செஞ்சேனைப்படை விஸ்வரூபம் எடுத்து சீனா முழுவதிலும் செங்கொடியை நாட்டி சோசலிச அரசான மக்கள் சீனக் குடியரசை நிறுவியதோடு நின்றுவிடாமல் அதன் பசிக்கு அமைதியாகக் கிடந்த திபெத்தையூம் இரையாக்கிவிட்டது.

சீனா தனது நிலவிஸ்தரிப்புக் கொள்கையினால் 1959 இல் திபெத்தை ஆக்கிரமித்ததோடு அதனை சீனாவின் ஒரு மாநிலமாகவூம் பிரகடணப்படுத்தியதோடல்லாமல் அண்டை நாடான இந்தியாவின் இமாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளையூம் 1961 இல் ஆக்கிரமித்துக் கொண்டது. திபெத்தில் மிக அமைதியான ஆன்மீகம் மிளிர வாழ்வை நடத்திக் கொண்டிருந்த திபெத்தியர்கள் சொல்லணாத் துன்பங்களை அனுபவித்து அண்டை நாடுகளான நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர வேண்டி ஏற்பட்டது. இப்புலம் பெயர்வூ இன்று வரை 50 வருடங்கள் தொடர் கதையாவே நீண்டு செல்கிறது.

இவ்வாறு தொடர் புலம்பெயர்வூ இடம்பெற்றாலும் சீன ஆக்கரமிப்போடு திபெத்திலிருந்து வெளியேறிய திபெத்தின் ஆண்மீகத் தலைவர் தலாய்லாமாவூம், (கிறிஸ்தவ மதத்தின் அதிஉயர்பீடம் போப்பாண்டவர் என அழைக்கப்படுவது போல் திபெத்தின் ஆன்மீகத் தலைவர்களை தலாய்லாமா என்றழைப்பது திபெத்தியர்களின் வழக்கம்) அவருடைய சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் கோரியதோடல்லாமல் காலம் தாழ்த்தாது திபெத்திய மக்களின் சமூக, பொருளாதார, தேசிய ஒருமைப்பாட்டை நலிவடைந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பை உணர்ந்து திபெத்திய மக்களை ஒரு குடையின் கீழ் நிலை நிறுத்துவதற்காக இந்தியாவில் புலம்பெயர் அரசொன்றை 1959 இல் நிறுவினர். இவ்வரசு திபெத்திய மத்திய நிர்வாகம் என்றழைக்கப்படுகின்றது.

சீன ஆக்கிரமிப்பால் தாயகத்தில் திபெத்திய மக்களிடம் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு திபெத்திய மத்திய நிர்வாகம் பதிலீடாக அமைந்தது. இடம் பெயர்வூ, இராணுவ ஒடுக்கு முறை, சீன மக்கள் குடியேற்றம், ஒடுக்கு முறை என்பவற்றுக்கு மத்தியிலும் திபெத்திய மக்களின் விடுதலை உணர்வையூம், தேசியப் பற்றையூம் சீன அரசால் மழுங்கடிக் முடியவில்லை. அதற்கு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் திபெத்திய மத்திய நிர்வாகமே காரணம். அத்தோடு மிகப்பெரிய சீனப் பேரரசுக்கு மிகப்பெரும் சவாலாக இது இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

சீன ஆக்கிரமிப்போடு திபெத்தை விட்டு வெளியேறிய ஆன்மீகத் தலைவரும், சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் புகுந்து தமக்கான அரசை நிறுவூவதற்கு சீன எல்லையிலுள்ள இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் காங்கரா மாவட்டத்தில் தர்மசாலா என்ற நகரில் தமது புலம்பெயர்ந்த அரசாகிய திபெத்திய மத்திய நிர்வாகத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்நிர்வாகத்தின் முழுப்பொறுப்பையூம் பௌத்த தலைவராகிய தலாய்லாமாவே பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார். ஆனால் நீண்ட காலஓட்டத்தில் புதிய அரசியற் சிந்தனைகளின் வளர்சச்p புலம்பெயர் அரசொன்று பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி அரசாங்கத்தை அமைக்க முடியூமென்பதை திபெத்தியர்கள் நிரூபித்துக் காட்டினர்.

50 வருட கால நீண்ட புலம்பெயர் வாழ்வூ. திபெத்திய சமூகத்தை பெரிதும் பாதித்தாலும் கூட தர்மசாலாவில் தனது மடாலயத்தை அமைத்து வாழ்ந்து வரும் தலாய்லாமா அந்நகரில் ஏராளமான திபெத்தியக் குடியிருப்புக்களையூம், கல்விக் கூடங்களையூம் அமைத்து தமது தேசிய ஒருமைப்பாட்டை, சமூகப் பண்பாட்டு விழுமியங்களை, பாதுகாத்ததோடல்லாமல் தொடர் புலம்பெயர்வினால் இந்தியாவில் மட்டும் வாழ்கின்ற திபெத்தியர்கள் ஒரு லட்சத்தைத் தாண்டிவிட ஜனநாயகத் தேர்தல் என்ற சிந்தனை அவர்களிடம் உதயமாகியது. இதன் விளைவூதான் 2002 ஆம் ஆண்டு உலகளாவிய திபெத்தியர்களுக்கான ஜனநாயக ரிதியிலான தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவூசெய்து லாப்சங் டென்சின் என்பவரைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை நிறுவியிருக்கின்றனர்.

உலகளாவிய திபெத்தியர்களின் ஜனநாயகத் தேர்தல் என்று இதைச் சொல்லப்பட்டாலும் கூட. இந்தியாவிலும், நோபாளத்திலுமே இத்தேர்தல் நிகழ்ந்திருக்கிறது. மாறிவரும் உலகிற்கு ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு தேசத்தின் மக்கள். பிறிதொரு நாட்டில் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக விழுமியங்களைத் தழுவியதான தேர்தலை நடத்த முடியூம் என்பதை முதன்முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

திபெத்திலிருந்து இடம் பெயர்ந்த திபெத்திய அரசு. நிலத்தையூம், இறைமையையூம் இழந்ததே தவிர. மக்களையூம், அரசாங்கத்தையூம் அது இழக்கவில்லை. என்று சொல்வதே பொருத்தமானது ஏனெனில் திபெத்திய நிலம் சீனாவின் ஆக்கிரமிப்பினால் விழுங்கப்பட்டு விட்டது. ஆகவே நிலம் இழக்கப்பட்டது. நிலம் இழக்கப்பட்டமையினால் தாயகத்து இறைமையூம் இழக்கப்பட்டு விட்டது. இறைமை என்கின்ற போது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ்கின்ற மக்கள் மீது அந்நாட்டின் அரசாங்கம் செலுத்துகின்ற அதிகாரம் அல்லது பலப்பிரயோகமே இறைமையாகும். அரசாங்கத்தின் பலப்பிரயோகம் என்கின்றபோது அவ்வரசாங்கத்தின் சட்டமன்றம் இயற்றுகின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய குடிகளை கீழ்ப்படிந்து நடக்க. நிர்வாகத்துறை ஆணையிடுவதும், அவ்ஆணையை மீறுவோரை நீதித்துறை மூலம் தண்டிப்பதற்கு அரசுக்கே உரித்தான மேலான அதிகாரமே இறைமை என அரசியலாளர்கள் வரையறுக்கின்றனர்.

எனவே அரசுக்குரித்தான நிலம், மக்கள், இறைமை, அரசாங்கம் என்னும் கூறுகளில் நிலத்தையூம், இறைமையையூம், மக்களையூம் இழந்து புலம்பெயர்ந்து உருவாக்கப்பட்ட இடம் பெயர்ந்த அரசுகளில் திபெத்திய மத்திய நிர்வாகம் குறிப்பிட்டளவூ மக்களையூம் தன்னகத்தே கொண்ட ஒரு அரசாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வரசு புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்கள் மீது ஒருவகையான இறைமையை கொண்டிருக்கின்றது. அது எவ்வாறெனில் மத்திய நிர்வாகம் எடுக்கின்ற சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க கட்டளையிடுகின்றது. ஆனால் கட்டளையை மீறுவோரை அதனால் கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ முடிவதில்லை. அவ்வாறு தண்டிப்பதாயின் அது இயங்கும் நாட்டின் இறைமையை மீறுவதாகிவிடும். ஆகவே இடம்பெயர்ந்த திபெத்திய அரசுக்கு சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒருவகையிலான சமூக உள்ளக இறைமையைக் கொண்டிருக்கின்றது என்றே கொள்ளலாம்.

இவ்வாறு பல்வகைப் பரிமானங்களைக் கொண்ட திபெத்திய மத்திய நிர்வாகம் உலகின் முக்கிய நாடுகள் யாவற்றுடனும் ராஜரீக உறவூகளை வைத்திருப்பதோடு அந்நாடுகளில் இவ்வரசின் பிரதிநிதிகள் தங்கியூமிருக்கின்றனர். ஆனால் இவ்வரசை எந்தவொரு நாடும் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. ஏன் இவ்வரசு இயங்கும் இந்தியாவில் கூட இவ்வரசு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது திபெத்தியர்களின் துரதிஸ்டமே. ஏனெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் ஆட்டத்தில் இந்நாடு பகடைக் காயாக உருட்டப்படுகிறது என்பதே உண்மை. எனினும் இவ்திபெத்திய இடம்பெயர் அரசின் செயற்பாட்டினால் தாயக திபெததில் வாழும் மக்கள் விடுதலை தாகம் தணியாதவர்களாக என்றௌ ஒருநாள் திபெத் விடுவிக்கப்படும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு தமது தேசிய எழுச்சியை சீனாவின் கொடிய இராணுவ அடக்கு முறைக்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்து இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாசீசப் படையெடுப்பால் போலந்து ஆக்கிரமிக்கப்பட்டபோது போலந்து அரசுத் தலைவர்கள் பிரித்தானியாவிற்குத் தப்பிவந்து 1939 இல் ஒரு இடம்பெயர்ந்த அரசினை உருவாக்கினர். இந்தப் பேரளவிலான அரசாங்கம் சில உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களோஇ இறைமையோ இருக்கவில்லை. ஏனெனில் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தை ரஷ்யாவின் செஞ்சேனைப்படை 1945 இல் மீட்டாலும் கூட அந்நாட்டின் மீது சோசலிக் கோட்பாட்டை அமுல்ப்படுத்தியதனால் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் இயங்கிய போலந்தின் முதலாளித்துவ அரசால் சோசலிச சோவியத் ரஷ்யா 1991 இல் வீழ்ச்சியடையூம் வரை நாடுதிரும்ப முடியவில்லை. பனிப்போர் காலத்தில் வல்லரசுகளால் போலந்து பந்தாடப்பட்டதனால் அதனுடைய இடம்பெயர்ந்த அரசு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு சாதனையையூம் அடைய முடியவில்லை.

இவ்வாறுதான் வல்லரசுகளின் பந்தாட்டத்தில் கொசோவோவூம், ஒசெற்றியாவூம், அப்காசியாவூம் சிக்கித் தவிக்கின்றன. இங்கு கொசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து போக எத்தணித்த வேளை சேர்பியாவூக்குச் சார்பான ரஷ்யா கொசோவோவின் பிரிவினை வாதத்தை எதிர்க்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவூம் கொசோவோவை அங்கீகரிகரித்தன. அதேவேளை ஜோர்ஜியாவிலிருந்து தெற்கு ஒசெற்றியா, அப்காசியா பிரிந்து போக உருவாக்கிய இடம்பெயர்ந்த அரசுகளை ரஷ்யா அங்கீகரிக்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. ஆகவே இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் பிராந்திய நலன், புவிசார் அரசியல் மையநிலைப்பாட்டு சாதக பாதகத் தன்மையே இனங்களுடைய சுய நிர்ணய உரிமையையூம்இ நாடுகளின் அல்லது பிராந்தியங்களின் விடுதலையையூம் தீர்மானிக்கின்ற சக்திகளாக விளங்கிவருவதைக் காணமுடிகின்றது.

பிராந்தியங்களின் விடுதலை அல்லது இறைமையை மீட்டல் என்பதற்கும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பெறுதல் என்பதற்குமிடையில்லான வேறுபாடுகளைப் பிரித்து விளக்குவது கடினமாயினும் கோட்பாட்டு ரீதியில் வேறுபட்ட விளக்கங்களையே கொடுக்க முடியூம். பிராந்தியங்களின் விடுதலை என்கின்ற போது குறித்த ஒரு பிராந்தியம் அல்லது பிரதேசத்தின் இறைமையை இன்னுமொரு நாடோ, அல்லது மத்திய அரசோ கையகப்படுத்தியோ, அல்லது கட்டுப் படுத்தியோ வைத்திருத்தலாகும். ஆனால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்றபோது ஒரு தேசிய இனத்திற்கு தன்னைத் தானே ஆளுகின்ற உரிமை அதாவது தனது அரசியல்த் தலைவிதியை தானே நிர்ணயிக்கின்ற உரிமை அதற்குண்டு. பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அடக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம். தனது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு தன்னைத்தானே ஆளுகின்ற உரிமையைப் பெறுதல். இவ்வாறு சுயநிர்ணய உரிமையைப் பெற்றதன் பிற்பாடுதான் இறைமை என்கின்ற கோட்பாடு பற்றிப் பேச முடியூம். ஆகவே சுயநிர்ணய உரிமையை பெறாமல் அல்லது அடையாமல் ஒரு தேசிய இனம் இறைமை பற்றி பேச முடியாது.

ஆகவே சுயநிர்ணய உரிமையைப் பெறல், இறைமையைப் பெறல் என்பவற்றிற்காக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமூகங்கள் தமது இலக்கினை அடைவதற்கு தன்னிச்சையான சுதந்திரப் பிரகடணம், இடம்பெயர்ந்த அரசு உருவாக்கம். போன்ற அரசியல் சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தி அவற்றினூடே தமது போராட்ட இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இடம்பெயர்ந்த அரசுகளிலிருந்து மாறுபட்டு தாயகத்திற்கு வெளியே புலம்பெயர்ந்து உலகெங்கும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் நாடுகள் கடந்து அமைக்கவிருக்கும் மக்களவைகளும், அவற்றினூடாக உருவாக்கமுனையூம் நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் வரலாற்றுத் தேவை, வரலாற்றுப் பரிமான வளர்ச்சி அதன் சாகத பாதகத் தன்மைகள் பற்றி தொடர்ந்தும் வரும் ………

வன்னியன்.

Share.

Comments are closed.