இராணுவமயமாக்கல் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலட்டதுப்படுத்தப்ப

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அரச தரப்பை சினங்கொள்ள வைத்துள்ள இந்த உப மாநாட்டினை,

Dominicans forJustice and Peace, Franciscans International, Pax Romana, Vivat International, NCDHR(National Campaign for Dalit Human Rights)-India, National SolidarityForum-India and OROSA- India ஆகிய அமைப்புக்கள் கூட்டாக நடத்தியிருந்தன.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் வட மாகாண முன்னாள் விசாரணை அதிகாரியாவும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிறிலங்காவுக்கான ஆய்வதிகாரியாவும் இருந்த, பக்ஸ் றோமா அமைப்பின் ஐ.நா மனித உரிமைச் சபையின் நிரந்த வதிவிடப்பிரதிநிதியான பேதுரு ஜேசுதாசன் அவர்கள், தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறிலங்காவின் இராணுவமயமாக்கல் , பௌத்தமயமாக்கல் , சிங்களமயமாக்கல் தொடர்பில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.

(Youtube: http://www.youtube.com/watch?v=LVSjow2h2Bw)

இந்த உப மாநாட்டில் சிறிலங்கா தொடர்பில் வெளிச்சத்துக் கொண்டு வரப்பட்ட விடயங்கள குறித்து கருத்து தெரிவித்த பேதுரு ஜேசுதாசன் அவர்கள்…

இந்தியா, ஈராக், இலங்கை ஆகிய நாடுகளில் சிறுபான்மை மதக்குழுக்களுக்கான மனித உரிமைகள்குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

சிறுபான்மை மதக்குழுக்களுக்கான உரிமைகளும,; அவர்கள் தங்களின் உரிமைகளை கடைபிடிப்பதற்கு சவாலாக விளங்குகின்ற விடயங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் சிறிலங்கா தொடர்பில் சிறுபான்மையினருக்கான சவால்கள், அச்சுறுத்தல்கள் வெளியில் இருந்தும், உள்ளுக்குள் இருந்தும் வருகின்றமை தொடர்பில் விபரிக்கப்பட்டது.

இதில் இலங்கையின் வட புலத்தினை உதாரணமாக கொண்டு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது.

இராணுவமயமாக்கல் தொடர்பில் ஒவ்வொரு ஊருக்கு ஒரு இராணுவம் முகாம், சிறிலங்காவின் இராணுவமயமாக்கல் அமைகின்றமை வெளிச்சம்போட்டதோடு, மன்னார் மாவட்டத்தில் மட்டும் 169 சிறு-பெரு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயம் உதாரணமாக கொள்ளப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரால், பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு இது இராணுவத்தின் காணி குறிக்கப்பட்டுள்ளமை ஆதாரமாக சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக இராணுவ பிரசன்னத்தால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் கூறப்பட்டதோடு, பெண்களுக்கான சுயதொழில் வாய்புக்களுக்கான புறச்சூழலை, சிறிலங்கா இராணுவத்தினரின் மரக்கறிக் கடைகள் பறித்துள்ளமை குறித்தும் எடுத்து விபரிக்கப்பட்டது.

இதேவேளை, ஒவ்வொரு இராணுவ முகாமுக்கு அருகாமையிலும் புத்தர் சிலைகள்நிறுவப்பட்டு வழிபாட்டு தளமாக அது மாறிவருகின்றமை குறித்தும் சொல்லப்பட்டது.

குறிப்பாக வன்னியின் உள்ளுர் பிரதேசங்கள் எங்கும,; வீதிகளின் பெயர் சிங்கள மயமாக்கபட்டுள்ளன. இதற்கு ஆதரமாக 100 வீதிகளை எடுத்துக் காட்டப்பட்டது என பேதுரு ஜேசுதாசன் அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபையின் ஒரு முனையில் இலங்கைத்தீவின் தமிழர் நிலமெங்கும் சிறிலங்கா அரசின் இராணுவமயமாக்கல் , பௌத்தமயமாக்கல் , சிங்களமயமாக்கல் வெளிச்சம்போட்டுக் காணிப்பிக்கப்பட்டு கொண்டிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் அரச தரப்பினர் இலங்கைத்தீவின் சகல இனங்களுக்களுக்குமான உரிமைகளை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்க அரசாங்கம் உறுதிப்படுத்தி வருதாக சபையில் உரையாற்றிய சிறிலங்காவின் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.

தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 

 

Share.

Comments are closed.