இரு உலகங்கள் என்ற சிங்களப் படத்தை வெளியிட கனடாத் தமிழர்கள் எதிர்ப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

புலம்பெயர் கனடியத் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். கனடாவில் 66வது வெனிஸ் திரைப்படக் கண்காட்சியில் போட்டியிட தயாரிக்கப்பட்ட சிங்கள இனவாதப் படமான “இரு உலகங்களுக்கு மத்தியில்” என்ற படத்தை கனடா ரொரண்டோவில் திரையிடவும், விழாவில் இப்படம் போட்டிக்கு முன்வைக்கவும் தமிழர்களிடம் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழா இயக்குனர்களுக்கு இது ஒரு இனவாதப் படம் எனச் சுட்டிக்காட்டப்பட்டு பல கடிதங்கள் குவிவதாக அறியப்படுகிறது.

கனடாத் தமிழர்களின் இந்த கடும் அழுத்தம் காரணமாக இப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், சிங்கள தயாரிப்பான தின் பண்டங்கள், ஆடைகள் , மற்றும் விமானசேவை என்பனவற்றை புறக்கணித்துவரும் நிலையில், தற்போது இப்படத்தை வெளியிடமுடியாத அளவிற்கு அழுத்தம் கொடுப்பதாக ஒரு சிங்கள நாளேடு கவலை வெளியிட்டுள்ளது.

தாய்நாட்டின் மீதுள்ள பற்றில் நாமும் குறைந்தவர்கள் அல்ல என்று வெளிப்படுத்தியுள்ளனர் கனேடியத் தமிழர்கள்.

Share.

Comments are closed.