இலங்கை இராணுவ உயரதிகாரிகளுக்கு ஜரோ.ஒன்றியம் பயணத்தடை ?

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தடைவிதிக்கும் சட்டமூலம் ஒன்று வரையப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. ஜக்கிய ராட்சியம் மற்றும் கமன்வெலத் நாடுகளின் தலைமைச் செயலகங்களில் இது குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இந்த வரைவை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவால் முன்மொழியப்பட்ட இந்தப் பிரேரணை கமன்வெலத் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஜக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இது பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் காங்கிரசிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், அமெரிக்கா இந்தப் பயணத்தடையை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரேரணை வெற்றிபெறுமாயின், அது தமிழர்களுக்கு கிடைத்த முதல்வெற்றியாகும்.
அத்துடன் யுத்தக் குற்றம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தும்வரை இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share.

Comments are closed.