ஈகைப்பேரொளி முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும் தமிழின படுகொலைகளை நிறுத்தவேண்டக் கோரியும்  ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உயிர்நீர்த்த ஈகைப்பேரொளி முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவுதினமான இன்று  (12.02.10) அவரின் மாபெரும் தியாகத்தினை நினைவுகூர்ந்து அவர் தன்னை தானே தீக்கிரையாக்கிய ஐநாசபை முன்றலிலே ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு இளையோர்களாலும் தமிழ் மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழின படுகொலையை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த வேளையில் உலக சமுகத்தை திரும்பிபார்க்க வைக்கும் நோக்கோடு அவரின் வதிவிடமான பிரித்தானியாவில் இருந்து உலகத்தலைவர்கள் ஒன்றுகூடும் இடமான ஐக்கிய நாடுகள் சபை முன்பாக, என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனச்சாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகிறேன் என்ற கூற்றை முன்வைத்து தமிழ் மக்களின் விடுதலைக்காய் தன்னுயிரை தீக்கிரையாக்கினார்.

வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகாதசன் உட்பட்ட பத்தொன்பது தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முருகதாசன் தன்னைத் தானே தீமுட்டிய ஐக்கிய நாடுகள் சபை முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

 

கடந்த வருடம் 12.02.2009 முருகதாசன் அண்ணா இரவு 20:15  மணி அளவில் உயிர்நீர்த்தார். அதை நினைவு கூறி இன்று 12.02.2010, 20:15 மணி அளவில் அத் திடலில் ஈகை சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

nஜனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 13.30 மணிக்கு ஐக்கியநாடுகள் சபை நோக்கி ஊர்வலமாக சென்று ஈகைப்பேரொளிகளுக்கு மலர்வணக்கம் நடைபெற உள்ளது. தீக்கிரையாக்கிய இவர்களை நினைவுகூர்ந்தும் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனித உரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாளை (13.02.2010) ஊர்வலம் நடைபெற உள்ளது- இவ் ஊர்வலத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஐரோப்பா இளையோர்கள் வேண்டி நிற்க்கின்றனர்.

Share.

Comments are closed.