ஈழத்தமிழர்களுக்கு உரிமையைப் பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை : விஜய.டி. ராஜேந்தர்

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு விஜய.டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான இலட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு.விஜய.டி. ராஜேந்தர் அவர்கள் இன்று இலட்சியகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மற்ற கட்சிகளின் கொடிகளிலிருந்து மாறுப்பட்டு தெரிய வேண்டும் என்ற காரணத்தால், கொடியின் வண்ணத்திலும், வடிவிலும் மாற்றம் செய்யப்பட்டு கருப்பு – நீலம் – சிவப்பு என்ற மூவர்ணக் கொடியாக இலட்சிய தி.மு.க கொடி மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்த அவர் கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர்,இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் அதிபர் ராஜபக்சேவின் அத்துமீறல்கள் ஆட்சியில், இலங்கை வாழ் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்றும் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சமச்சீர் கல்விக் கட்டணம் முறைப்படுத்தப்பட்டதைப் போல் சமச்சீர் பேருந்து கட்டணத்தையும் மாநில அரசு நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மத்திய மாநில அரசை கண்டித்து வரும் காலங்களில் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகததின் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும். இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு விஜய.டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Share.

Comments are closed.