எம்மைப் பற்றி

தமிழ் இளையோர் அமைப்பு

தமிழ் இளையோர் அமைப்பு முதன்முதல் எம் தாய் நாட்டில் அதாவது தமிழ் ஈழத்தில் உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பு முற்றிலும் தமிழ் இளையோர்களின் செயற்பாட்டில் இயங்குகிறது.

இதனைத் தொடர்ந்து இவ் அமைப்பு லண்டன், கனடா என பல நாடுகளில் பரவியது. தற்பொழுது சுவிஸ் நாட்டிலும் பல மாநிலங்களில் இவ் அமைப்பு இயங்குகின்றது. இதன் நோக்கமானது உலகில் இருக்கும் சகல தமிழ் இளையயோர்ளையும், மாணவர்களையும் ஒன்று சேர்ப்பதாகும்.

11 வயதில் இருந்து 30 வயது வரை உள்ள இளையோர்கள் இவ் அமைப்பில் இணைந்துகொள்ளலாம்.

நோக்கங்கள்:

முதற்கண் எம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவி வழங்குவதும், அத்துடன் இலங்கயில் வாழும் இளையோர்களுக்கு உதவுவதாகும். இந் நோக்கங்கள் எங்கள் நெறிமுறையின் அடிப்படைக்கூறுகளாக் கருதப்படுகின்றன.

எமது பார்வைக்க…

எமது தாயகத்திலிருந்து குடியேறிய தமிழ் மக்கள், இரண்டு தலைமுறையாக தொலைதூரநிலங்களில் அவரது வாழ்க்கைகளைத் தொடர்கிறனர். இந் நிலங்களில் வளர்ந்து வரும் மக்கள், குறிப்பாக இளையோர்கள், நாம் கடந்து வந்தவற்றை தெரிந்துகொள்ளும் முகமாகவும், எமது வரலாறு மற்றும் எமது கலாசாரத்தினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் வண்ணமும், அவர்களுக்கு நாம் அவற்றை எடுத்துக்கூற வேண்டும். அத்துடன் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மிகவும் உறுதியான அறிவுசார்ந்த நோக்கங்களுடன் வளர வழிகாட்டவேண்டும். அதேநேரத்தில், எங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவது எம் கடமைகளில் ஒன்றாகும். புலம்பெயர் நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் மொழி, கலாசார வழக்கங்கள் பழகி இருந்தாலும், எமக்காய் ஒரு நாடு, மொழி, கலாசாரம் எதிர்காலத்தில் எமக்காகக் காத்துள்ளது என்பதை நினைவில் என்றுமே கொள்ளவேண்டும்.

அந்தவகையில் இளைஞர்களானவர், அவர்கள் வாழும் அந்நாட்டு மக்களோடு நல்லுறவைப்பேணி, எங்களது திட்டங்களைப் பகிர்ந்து வெற்றியையும் சகவாழ்வையும் காணவேண்டும். இத்தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம், உருவாக்கப்பெற்ற சிறப்பான அமைப்பே :
தமிழ் இளையோர் அமைப்பு.