எரிவாயுக்கள் மூலம் புலிகள் கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி – பாதுகாப்பு தரப்பு மறுப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

எரிவாயுக்களை கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகத்துக்குரியவர்களை கொலை செய்தாக பொய்யான செய்தியை பரப்பியவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணையை நடத்தி வருகிறது.

ஆதாரங்கள் தெரியாமல் இருப்பதற்காக சீனாவி;ல் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை கொண்டே இந்த இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது

இந்தநிலையில் சீனாவில் இருந்து அவ்வாறான எரிவாயு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் எனவே இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தமது உயர் கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார்

தடுப்பில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையி;ல் அவர்களை விடுவித்தால் சர்வதேசத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்காகவே நச்சுவாயு கொண்டு சந்தேகத்துரியவர்கள் அடையாளம் தெரியாமல் கொலை செய்யப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன

இதனையே பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.

Share.

Comments are closed.