ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
· சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
· தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
· மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிவந்தனின் நடை பயணத்திற்கு ஆதரவாக உதவியாளர்களும், தமிழ் மக்களும் மாறி மாறி அவருடன் நடந்து செல்லுகின்றனர்.
25ஆம் திகதி இரவு சிவந்தன் டோவரை சென்றடைவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 26ஆம் நாள் திங்கட்கிழமை காலையிலேயே அவர் டோவரைச் சென்றடைய முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
நாளை பிரான்சின் கடற்கரையான கலையை அவர் சென்றடைந்ததும் பிரான்சிலுள்ள தமிழ் அமைப்புக்கள் சிவந்தனை வரவேற்று, தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் அவருடன் இணைந்து நடந்து செல்ல இருக்கின்றனர்.
பரிஸ் ஊடாக ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் இடம்பெறவுள்ளன.
{ppgallery}news/sivanthan/progress2{/ppgallery}