ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், இலங்கை சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். சுயாதீன விசாரணை கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த வருடம், நாடுகளுக்கு இடையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மதிக்கவேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அனைத்துத் தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய வன்முறைகள் தொடர்பாக இலங்கை முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதுபோன்ற நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் தன்னாலான உதவிகளை வழங்கும் எனவும் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா மனிதஉரிமைச் சபையின் அமர்வின்போது தனது கடந்த வருட அறிக்கையினைச் சமர்ப்பித்து உரைநிழ்த்தியபோது நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.  

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 வருடகாலப் போர் முடிவுக்குவந்த பின்னர், அனைத்துத் தரப்புகளும் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளித்தோன்றியிருந்தன.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்திருந்தது.

கடந்த வருடம், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை முயற்சித்த போதும், இலங்கை ஏனைய நாடுகளின் உதவியுடன் தமது யோசனையை நிறைவேற்றி அந்த முனைப்பை முறியடித்திருந்தது.

 

Share.

Comments are closed.