தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் தீர்வு காண்பது என்பது தொடர்பான கோரிக்கை சிறீலங்கா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஒஸ்லோவில் இடம்பெற்ற தீர்வின் அடிப்படையில் தீர்வு திட்டத்தை முன்வைக்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே.
சிறீலங்கா அரசாங்கம் நோர்வே அரசாங்கத்தின் தலையீட்டுடன் கூடிய எந்த தீர்வு திட்டத்திற்கும் இணங்கப்போவதில்லை என தெரிவித்திருந்ததாக அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.