கனடா கியூபெக்கில் நாளை “தாயக தாகம்”; – இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

 கனடாவின் கியூபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கியூபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்
 
வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்
 
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்
 
எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
 
 
இந்நிகழ்வில் மண்ணில் விதைத்த வீர மறவர்களிற்கும் அன்னை மண் இழந்த தமிழ்ர்களுக்குமான வணக்க நிகழ்வும்

ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக்கண்காட்சியும்

பேசமுடியாத உண்மைகள் எனும் வரலாற்று ஆவணக் கண்காட்சியும்

வதைமுகாம் துயரத்தை எடுத்துச்சொல்லும் உலக ஊடகங்களின் பார்வைகளும் வதைமுகாம்களின் மாதிரிக் காட்சிப்படுத்தல்களும் மற்றும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருக்கின்றது.
 
எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க உறுதியெடுக்கும் முகமாக அனைவரும் அணிதிரளுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Share.

Comments are closed.