கறுப்பு யூலையை முன்னிட்டு கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த நிகழ்வு

Google+ Pinterest LinkedIn Tumblr +

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் மனங்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. தொடர்ந்து ஏழு நாட்களாக தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை நிம்மதியாக வாழ முடியாதபடி இவ்வினக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவிர்தனர், இன்றும் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கனடா நாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் University of Toronto St. George, University of Toronto Missisauga, University of Toronto Scarborough Campus, York University, Guelph and Humber, Ryerson University ஆகிய ஆறு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் அமைப்புகளினாலும்  “I Remember” என்னும் கறுப்பு யூலை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு புதன் யூலை 21, 2010 அன்று Ryerson பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 4:30க்கு அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் மாணவர் மட்டுமே கறுப்பு ஆடை அணிந்தவாறு கலந்து கொண்டனர். “I Remember” நிகழ்வு முழுக்க முழுக்க மாணவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு என்பதும் தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவருக்கு கறுப்பு யூலை பற்றி அறிவூட்டும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர் கலந்து கொண்டனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து கறுப்பு யூலையின் ஏழு நாள் துயரங்களை பற்றி பல்கலைக்கழக மாணவரால்அமைக்கப்பட்ட கண்காட்சிகள் மூலம் மாணவருக்கு கறுப்பு யூலை பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவரால் தயாரிக்கப்பட்ட காணொலிகள் ஒளிப்பரப்பப்பட்டன. இதனைத் தொடரந்து, கறுப்பு யூலையின் பொழுது தமிழருக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளையும் அநியாயங்களையும் நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றின் ஊடாக மாணவர் சித்தரித்தனர்.

மேலும், அவர்களின் உணர்வுகளை ஓவியம், எழுத்து, பேச்சு போன்றவற்றின் ஊடாகவும் வெளிப்படுத்தினர். நிகழ்வின் நிறைவில் நாம் ஒற்றுமையாய், மனம் தளராமல் எமது தாயகத்திற்காய் உழைப்போம் என்னும் கருத்தினை அனைத்து பல்கலைக்கழக மாணவரும் முன்வைத்தனர். பிற்பகல் 8:00 மணிக்கு கறுப்பு யூலை நிகழ்வு நிறைவு பெற்றது.

{ppgallery}news/blkjulycanada{/ppgallery} 

 

Share.

Comments are closed.