சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – மேர்வின் சில்வா

Google+ Pinterest LinkedIn Tumblr +


சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, சிறீலங்காவின் சர்ச்சைக்குரிய அமைச்சரான தொழிலமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதான இவரது தாக்குதல் நடவடிக்கைகள், மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, கொழும்பின் ஊடகங்கள் இவரை “அடிதடி அமைச்சர்” என வர்ணித்து வருகின்றன.
இவ்வாறான பின்புலத்தில் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீரவை இவரும், இவரது காடையர் குழுவும் தாக்கியுள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் தோன்றி, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.