சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்

Google+ Pinterest LinkedIn Tumblr +


 பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அங்கு விஜயம் மேற்கொண்ட பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முல்லைத்தீவு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா படைவீரர்களினால் அணிவகுப்பு மரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் 59 வது டிவிசன் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் போரின் பின்னரான பாதுகாப்பு நிலைமைகளையிட்டு கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share.

Comments are closed.