சரத் பொன்சேகா, அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளார்

Google+ Pinterest LinkedIn Tumblr +

இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா நேற்று மாலை, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கான காரணங்கள் எவையும் தெரியவரவில்லை. எனினும் இந்த சந்திப்பு இடம்பெற்றதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க தூதரகமும் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

அண்மையில் அமெரிக்காவுக்கு தமது கிரீன் காட் நீடிப்புக்கு சென்ற வேளையில் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு சரத் பொன்சேகாவை ஆஜராகுமாறு கோரப்பட்டதும், பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தின் வலியுறுத்தலின் பேரில் இலங்கைக்கு திரும்பியதுமான நிகழ்வுகளுக்கு மத்தியிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த விசாரணையின் போது, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக  சரத் பொன்சேகா சாட்சியம் அளிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.

இந் நிலையிலேயே சரத் பொன்சேகாவை குறித்த விசாரணைக்கு சமுகமளிக்கவேண்டாம் எனவும், உடனடியாக நாடு திரும்புமாறும்  இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இராஜதந்திர கடவுச்சீட்டுடன், தமது உயர் அதிகாரி ஒருவர் விஜயம் செய்துள்ள போது அவரை விசாரணை செய்யமுடியாது என்ற வாதத்தை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் முன்வைத்திருந்தது.
 

Share.

Comments are closed.