பொது மக்களின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் செவிசாய்க்காமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள்சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், இது தொடர்பில் அவரின் முன்னெடுப்புகள் குறித்து ஆராய்வதற்காக பான் கீ மூனுடன் நெருங்கிய அனுகுமுறைகளை தாம் பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பில் தேசிய விசாரணைகளை நடத்துவதாக இலங்கை உறுதியளித்திருந்த போதும், அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் இது தொடர்பில் அக்கறையுடன் விசாரணை நடத்துவதற்கான, நடத்தியதற்கான எந்த சான்றுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பொது செயலர் பான் கீ மூனுடன், இந்த விடயம் தொடர்பில் எந்த திட்டத்தை முன்னெடுக்க முடியும் என தாம் கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.