ழீழம் சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
20-11-09
அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு
எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தற்போது இராணுவத்தின் பிடிக்குள் இருந்துகொண்டு சிறிலங்கா அரசின் திட்டத்திற்கு அமைவாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியும் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் துணைத் தளபதியாகவும் இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான தவேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.