சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இரண்டினதும் உரித்தான நூல் இதுவாகும். சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் யேர்மனி பிறேமன் நகரில், 2013 டிசம்பர் 07ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் ஆதாரத்தோடு ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். சர்வதேச மனித உரிமைகள் சங்கம், சிறிலங்காவிலான அமைதிக்கான அயர்லாந்து மன்றம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டது. 13 மொழிகளில் இந்நூல் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தகுதி, சிறிலங்கா தொடர்பான 1வது அமர்வின் தீர்ப்பு டப்ளின் ஜனவரி 2010, முறைப்பாடுகள், எதிர்தரப்பு வாதம், தீர்ப்புகள், பரிந்துரைகள், முடிவுறுத்தும் குறிப்புகள், இணைப்பு 1 முறைப்பாடு தரப்பின் தொகுப்புரையின் சில பகுதிகள், இணைப்பு 2 புகைப்படம், மற்றும் எழுத்து மூலமானவை என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் விரிந்து செல்கின்றது.