சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நாவின் விசாரணை மார்ச்சில்

Google+ Pinterest LinkedIn Tumblr +
சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் முலாம் நாள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விசாரணையின் போது சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இணங்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த வேறு இராணுவ அதிகாரிகளை இந்த விசாரணையின் போது பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முனைப்புக் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share.

Comments are closed.