சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.2009) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வாசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் விக்கிரமசிங்கவுக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் ரொபட் பிளேக் தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அமெரிக்கா மனித உரிமைகளை முன்னிறுத்தி சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியான நடவடிக்கையே இது என சிறீலங்கா அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்னைகள் என ஐ.நா சபை கூறும் விவகாரங்கள் தொடர்பாக அதன் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே கொழும்புக்கு வருகை தந்திருக்கும் இத்தருணத்தில், அமெரிக்காவின் இந்த நகர்வு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

Share.

Comments are closed.