சிறீலங்காவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழு அமைக்கப்படவில்லை :பான் கீ மூன்

Google+ Pinterest LinkedIn Tumblr +
ஐ.நா செயலாளர் நாயகம பான் கீ மூன் அவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்காது எனவும் அது பான் கீ மூன் அவர்களுக்கே ஆலோசனை வழங்ககும் எனவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா ஐனாதிபதிக்கும் பான் கீ மூன் அவர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் இதில் இக்குழு தொடர்பாகவும் இலங்கை பிரச்சனை தொடர்பாக உரையாடியதாகவும் இக்குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இத்தொலைபேசி உரையாடல் வழமையானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.