சிறீலங்கா இராணுவத்தினரின் போரின் பின்னர் வன்னியின் காட்சிகள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

ஏ-9 பாதையில் வழி நெடுகிலும் புத்தருக்கு கோவில்கள் அமைக்கப்பட்டு சுற்றுமதில்களும் கட்டப்பட்டு வெள்ளைப் பூச்சுக்களும் பூசப்பட்டுவிட்டன. ஆனால், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட தண்ணீர் தாங்கியை தூக்கி நிறுத்த சிறீலங்காவிடம் பொறுளாதார வளம் இல்லை.

சிங்கள இராணுவத்தின் அமைவிடம் சுற்றுவேலி அமைத்து வரவேற்புப் பலகை வைத்து பாதுகாக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர்களின் பாடசாலை இடிபாடுகளுடன் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றது.

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட ஞாபகச் சின்னங்கள், சிதைக்கப்பட்டு சிறீலங்காவின் போர் வெற்றியை தாங்கிநிற்கும் சின்னங்கள் வன்னியெங்கும் நிறுவப்படுகின்றன. இது ஆனையிறவில் கட்டப்படும் நினைவு தூபி. இதன் உயர் சுமார் அறுபது அடி. அருகே இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நினைவுதூபியும், ஆனையிறவு தாக்குதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கனரக வாகனம். அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கிடக்கும் காட்சியும்.


புளியங்குளம் பகுதியில் முன்னாள் போராளிகள் தடு்த்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா படை முகாம்


கனகராயன் குளம் பகுதியில் ஒரு இந்துக் கோவில் வளாகத்திற்குள் அமைக்கப் பட்டிருக்கும் புத்த வழிபாட்டிடம்


மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று – அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது – சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ)


கிளிநொச்சியில் இருந்த தமிழர் கலாச்சார மண்டபம் கற் குவியலாய்


வீழ்த்தப்பட்டிருக்கும் கிளிநொச்சி தண்ணீர் தாங்கிக்கு அருகே சிங்கள வாணிபர்கள்


கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டிருக்கும் புத்த வழிபாட்டிடம்


பரந்தன் சந்தியில் உடைக்கப்பட்டுக் கிடக்கும் மாவீரர் நினைவிடம்


ஆனையிறவில் எழுப்பப்படும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிச் சதுக்கம்


புளியங்குளத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மக்கள்

Share.

Comments are closed.