சிறையில் உள்ள புலி உறுப்பினர்களைப் பார்வையிட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குக!: இலங்கை அரசுக்கு கனடா வலியுறுத்து

Google+ Pinterest LinkedIn Tumblr +

சிறையில் வாடும் போராளி களை செஞ்சிலுவைச் சங்கம் பார் வையிட அனுமதி வழங்க வேண் டும் என்று இலங்கை அரசை கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான கனடா அரசின் நிலைப்பாடு பற்றி கனடா ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புருஸ் ஸ்ரான்ரொன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 லங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்களுக்கிடையே நல்லுணர்வை ஏற்படுத்தல், மீள்கட்டுமானம் ஆகியவற்றை விரைந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

 மொழி, மதம், இன வேறு பாடு ஆகியவற்றுக்கப்பால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளை சகல இனங்களுக்குமான அரசியல் தீர்வை இலங்கை அரசானது வழங்க 

வேண்டும் என்று கனடா எதிர்பார்க்கின்றது.

இலங்கை அரசானது உள்ளூர் மற்றும் சர்வதேச அரசுசாராத அமைப்புகளுக்கு இலங்கையின் வடபகுதிக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு புனர்வாழ்வு நிலையங்களுக்கும், முன்னாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைக்கூடங்களுக்கும் செல்வதற்கு முழுமையான அனுமதியை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அனுபவ ரீதியான ஆலோசனைகளைக் கேட்டுப்பெறுவது அனுகூலமானது.

கனடா அரசானது தனது கொள்கைகளான சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்திற்குக் கட்டுப்படுதல் ஆகியவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

இப்படி அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.